தமிழ்நாட்டு அரசு விளையாட்டு துறை மூலம் பள்ளி மாணவர்களை தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெற வாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக ஒன்றிய, மாவட்ட அளவில் பங்கேற்று அதில் தேர்வானவர்களை தேசிய அளவில் தடகள போட்டியில் பங்கேற்கும் விதமாக சென்னை வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் புதியதாக அமைக்கப்பட்ட உலகதரமான சின்தடிக் ஓடுதளத்தில் குடியரசு தின தடகள போட்டிகள் இன்று முதல் 3 நாட்கள் மகளிர்களுக்கும், அதனை தொடர்ந்து மூன்று நாட்கள் ஆடவர்களுக்கும் நடைபெறுகிறது.
துவக்க விழாவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத் முறைப்படி தேசிய கொடி மற்றும் ஒலிபிக் கொடிகளை ஏற்றிவைத்தர., செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட 38 மாவட்டங்களை சேர்ந்த 7அயிரம் வீரர் வீராங்களைகள் பங்கேற்ற வுள்ள நிலையில், இன்று விளையாட்டு பல்கலைக்கழக அணியுடன் சேர்த்து 39 அணியினர் அணிவகுத்து மறியாதை செய்தனர். அதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சிய ஒலிபிக் ஜோதி ஓட்டத்தை துவக்கிவைத்து ஒலிம்பிக் ஜோதிதை ஏற்றிவைத்தார்.
மாணவியர்களில் கண்கவர் பரதநாட்டியம், ஒயிலாட்டம், போரை தவீர்த்து அமைதியை ஏற்படவேண்டும் ஆயூதங்களுடன் மோதி வெள்ளை கொடியுடன் சாமதானமடையும் விதனாக காட்சிகளை தத்ருபமாக நடித்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
அதனை தொடர்ந்து மாணவியர்கள் உலக தரம்வாய்த சின்தடிக் ஓடுதளத்தில் குறுகிய நேரத்தில் ஓடி தங்களின் சாதனைகளை பதிவு செய்தனர்.
இதில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் வீராங்களைகளை தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள் என விளையாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
29 ம் தேதி வரையில் மகளிருக்கும் அதனை தொடர்ந்து மூன்று நாட்கள் ஆடவர்களுக்கும் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் 38 மாவட்டத்தை சேர்ந்த உடற்கல்வி ஆய்வாளர்கள், திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் எல்.இதயவர்மன் உள்ளிட்ட ஏராளமாக பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.