மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 1.7.2023 முதல் 4 சதவிகித அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியமைக்காக பல்வேறு அரசு அலுவலர்கள் சங்கங்கள், அரசு பணியாளர்கள் சங்கங்கள், ஓட்டுநர் சங்கங்கள், தொழிலாளர்கள் சங்கங்கள், போக்குவரத்து கழக சங்கங்கள், செவிலியர் சங்கம் மற்றும் பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.