
குரோம்பேட்டையில் உள்ள சிவன் கோவில்களில் ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தை முன்னிட்டு புருஷோத்தம நகர் விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் காசி விஸ்வநாதர் அன்னாபிஷேக அலங்காரத்திலும், காந்திஜி நகர் துர்க்கை அம்மன் ஆலயத்தில் அமிர்தகடேஸ்வரர் அன்னாபிஷேக காட்சியிலும், ராதா நகர் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் காசி விஸ்வநாதர் அன்னாபிஷேக காட்சியிலும், பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் சுந்தரேஸ்வரர் ஸ்ரீ ரங்கநாதர் அன்னாபிஷேக அலங்காரத்திலும் கருமாரியம்மன் பவுர்ணமி அபிஷோகம் அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.