கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ் (15) இவருடைய சகோதரர் ரவி (15) இவர்களுக்கு காது கேட்காத நிலையில் மற்றொருவர் வாய் பேசமுடியாத சிறுவனான மஞ்சுநாத் (11) அப்பகுதியில்உள்ள அரசு பள்ளியில் சுரேஷ் எட்டாம் வகுப்பும், ரவி மஞ்சுநாத் ஏழாம் வகுப்பும் படிந்து வந்துள்ளனர்.

பள்ளி விடுமுறை என்பதால் ஊரப்பாக்கத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்க்கு வந்தவர்கள் இன்று காலை அருகில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயில் மூவர் மீதும் மோதியது இதில் மூன்று சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த உறவினர்கள் உடல்களை கண்டு அழுத்தது பெரும் சோகத்த ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்க்கு வந்த தாம்பரம் இருப்புபாதை போலீசார் உடல்களை காப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.