ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வு தாள் கசிவு வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள்.
இது தவிர தௌசாவில் உள்ள மஹூவா தொகுதியில் போட்டியிடும் கட்சி வேட்பாளர் ஓம்பிரகாஷ் ஹட்லா உட்பட மேலும் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் இன்று நேரில் ஆஜராவதற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.