செங்கல்பட்டு மாவட்ட ம் மேற்கு தாம்பரம் மாந்தோப்பு பகுதியில் 1948 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எம்.சி.சி.ஆர்.எல் உயர் நிலை பள்ளி துவங்கி 75 ஆண்டு ஆவதை முன்னிட்டு இன்று இப் பள்ளியில் 75 ஆண்டு பவள விழா இன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். பின் பவள விழா மலர் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் முதல்வர் வில்சன், மற்றும் சிறப்பு விருந்தினர் ஆல்பர்ட் தேவபிரசாத், கிறிஸ்துவ கல்லூரி காசாளர் கிரிஸ் கல்லுபுரக்கல், பள்ளி தாளாளர் கரோலினா விக்டோரியா, பள்ளி தலைமை ஆசிரியர் லலிதா சாந்தகுமாரி, ஆசிரியர்கள், முன்னள் மாணவர் சாமுவேல் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.