
சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் தனியார் நோய்கண்டறிதல் மைய்யத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் தாம்பரம் மாநகராட்சியின் மண்டல குழு தலைவர்கள் கருணாநிதி, ஜோசப் அண்ணாதுரை, காமராஜ், இந்திரன் உள்ளிட்டோர் தாம்பரம் மாநகராட்சியில் போதிய பணியாளர்கள் இல்லாததால் மக்களின் அடிப்படை பணிகள் தடைபடுவதாகவும் அதனால் பணியாட்களை நியமிக்க கோரிக்கை விடுத்தனர்.
இதனை கேட்டுகொண்ட அமைச்சர் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார்.