சென்னை ரெட்ஹில்ஸ் அருகே உள்ள பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (வயது56) இவர் கிழக்கு கடற்கரை சாலை கொட்டி வாக்கத்தில் தங்கி வயதான முதியவர் ஒருவரை கவனிக்கும் ஆயா பணி செய்து வந்தார்.
இன்று மாலை பணி முடிந்து வீடு திரும்ப வரும்போது கொட்டிவாக்கம் பஸ்நிலையம் எதிரே ரோட்டை கடக்க முயன்றார். அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த பாண்டிச்சேரி அரசு போக்குவரத்து கழக பஸ் பத்மா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பத்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.