கண்ணிகி நகரை சேர்ந்தவர் மூர்த்தி(55), சாந்தோமில் உள்ள செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். நேற்று நள்ளிரவில் அவர் வீட்டில் புகை வந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் துரைப்பாக்கம் தீயணைப்பு துறையினர் அவர் வீட்டில் தீயை அனைத்தனர். ஆனால் படுக்கையில் உடல் கருகிய நிலையில் தீ காயங்களுடன் மூர்த்தி இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய கண்ணகிநகர் காவல் துறையினர் கூறாய்வுகாக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் விசாரனை செய்து வருகிறார்கள். குடிப்பழக்கம் உள்ள மூர்த்தி கொசுவர்த்தி ஏற்றிய நிலையில் தூங்கியதால் தீபற்றியதா, அல்லது வேறு காரணம என போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளர்.