
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சரக்கு ஆட்டோவில் புதிய வாஷிங் மிஷன்கள் கொண்டு செல்வதை பார்த்த போலீசார் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 6 வாஷிங் மிஷின்கள் புதிதாக ‘சீல்’ பிரிக்காமல் காணப்பட்டது. இதுகுறித்து போலீசார் டிரைவரிடம் விசாரணை செய்தனர். இதில், விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா கொண்டு செல்வதாக கூறினார். விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு வாஷிங் மெஷின்கள் ஆட்டோவில் கொண்டு செல்லப்படுமா?, என சந்தேகமடைந்த போலீசார் 6 வாஷிங் மிஷன்களையும் கீழே இறக்கி சோதனை செய்தனர். இதில், ரூ.1.30 கோடி ரொக்கம், 30 புதிய செல்போன்கள் இருந்தது தெரியவந்தது. அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.