
குரோம்பேட்டை புருஷோத்தமன் நகர் 2ஆவது குறுக்கு தெருவில் தாம்பரம் மாநகராட்சி 36ஆவது வார்டு உறுப்பினர் சரஸ்வதி சந்திரசேகர், சந்திரன் மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து மரகன்றுகளை நட்டனர். மாமன்ற உறுப்பினர் கூறுகையில் யார் வீட்டிலும் மரக் கழிவுகள் சாலையில் போடாமல் வீட்டிலேயே இருந்தால் உறுப்பினரை தொடர்பு கொண்டு அதை அகற்ற எற்பாடு செய்யப்படும். சாலையில் வீசப்படும் மரக்கழிவுகளுக்கு இனி மாநகராட்சி அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார்.