போரூர் பகுதியை சேர்ந்தவர் சேவியர் (69) எல்.ஐ.சி ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு காரில் தனது நண்பர்களுடன் செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதிக்கு வந்துள்ளனர்.

காரை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஓட்டுனர் மலையானம் (36) ஓட்டி வந்துள்ளார்.

பின்பு மீண்டும் நேற்று மாலை தாம்பரம் – மதுரவாயல் புறவழிசாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்த போது அனாகாபுத்தூர் அருகே அரசு பேருந்து முந்தி செல்ல முயன்ற போது சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறம் மோதியுள்ளார். இதில் சேவியர் பலத்த காயமடைந்தார். ஓட்டுனர் மலையானம் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனையடுத்து விபத்தை பார்த்த வாகன ஓட்டிகள் உடனடியாக சேவியரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து ஓட்டுனர் மலையானத்திடம் விசாரனை செய்து வருகின்றனர்.