
சென்னையை அடுத்த தாம்பரத்தில் வருமான வரித்துறையினர் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில் சென்னை-1 தலைமை வருமானவரி ஆணையாளர் ஜெயந்திகிருஷ்ணன், முதன்மை வருமானவரி ஆணையாளர் பிரேமோத் குமார் சிங் உள்ளிட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டு வியாபாரிகள், ரியல் எஸ்டேட், கட்டுமான நிருவனத்தினர் உள்ளிட்ட பலதரப்பு வருமான வரி செலுத்துவோர்களின் பிடித்தம் செய்யப்பட்ட தொகை திரும்ப பெருவது குறித்தும், பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் எடுத்துரைத்தனர். நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வரிமான வரி செலுத்துவோரின் பங்கு மிக பெரியது. தமிழகம் பாண்டிச்சேரியில் மட்டும் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 264 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டு ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 900 கோடிக்கு இலக்காக வரிசெலுத்வோர்கள் என்கிற இலக்குடன் செயல்படுவதாக தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை-1 தலைமை வருமானவரி ஆணையாளர் ஜெயந்தி கிருஷ்ணன் ஐ.ஆர்.எஸ் :- வருமானவரித்துறை இளையதளத்தில் எளிதில் என்ன என்ன வரிகள் எந்த தேதியில் செலுத்திட வேண்டும். அதுபோல் செலுத்திய தொகைகான திரும்ப பெருதல் மனுக்கள் என்ன தேதி என குறிப்பிடும் காலெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது இது பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.
அதுபோல் புது தொழில்நுட்பங்கள் மூலம் அதிக வருமானம் ஈட்டும் நிறுவனங்கள், நபர்கள் என தகவல்கள் சூப்பர் கணிணி மூலமாக பெறுகிறோம். அதுபோல் சுழற்சி முறையில் வரி ஏற்போர்களை கண்காணித்து அதற்கான ரெயிட் செய்வதுதற்கு என குழுகள் செயல்படுகிறது. அதனால் வரிசெலுத்துவோர்களை எளிய முறையில் செலுத்தும் விதமாக இதுபோல் முகாம் நடத்தப்படுகிறது என்றார்.