குரோம்பேட்டை நேரு நகரில் உள்ள ஸ்ரீ அய்யாசாமி அய்யர் பள்ளியில் சர்வதேச ரோட்டரி சங்கம் டோக்கியோ சுயோசின் ரோட்டரி சங்கம் இணைந்து தொடக்க பள்ளிக்கு (1 முதல் 5ம் வகுப்பு வரை) 5 ஸ்மார்ட் போர்டு நன்கொடையாக வழங்கப்பட்டது.பள்ளி செயலர் ஆர். மனோகரன், பள்ளி உறுப்பினர் சி.ஆர்.நரசிம்மன், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெ.இராஜஸ்ரீ, துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ரோசாலி, ஆசிரியர்கள் ஆகியோர் முக்கிய பிரமுகர்கள் மகாவீர் போத்ரா, பாலசந்திரன், மணிவண்ணன் மற்றும் வந்திருந்த அனைவரையும் பூரண கும்பம் மற்றும் நாதஸ்வர, மேளதாளத்துடன் வரவேற்றனர். மாணவர்களின் நடன நிகழ்ச்சிகளுடன் பொன்னாடை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.