எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அங்கமான அச்சிறுபாக்கம் வேளாண் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள, திருவள்ளுவரின் சிலையை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் எம்.பி.திறந்து வைத்து திருக்குறள் உரை, உலகை ஆளும் திருக்குறள் திருக்குறளை எடுத்தாளும் பாரத பிரதமர் என்ற இரண்டு நூல்களை வெளியிட்டார். ம.ஜவஹர்லால் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு விஜிபி உலகத் தமிழ்ச் சங்க தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் முன்னிலை வகித்தார். நூல் ஆசிரியர் நல்லசாமி ஏற்புரை வழங்கினார். எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் சி.முத்தமிழ்ச்செல்வன், பதிவாளர் சு.பொன்னுசாமி, தமிழப் பேராய தலைவர் கரு. நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் எஸ்ஆர்எம் வளாக அலுவலர் அருணாச்சலம் நன்றி கூறினார்.