
பேரிடர் கால அவசர தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ எனும் புதிய திட்டத்தின் சோதனை ஓட்டத்தை இன்று தமிழ்நாடு அரசு தொடங்குகிறது. இதன் மூலம் ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைவருக்கு ஒரே நேரத்தில் பேரிடர் குறித்த எச்சரிக்கை அனுப்பப்படும்.