
பாலஸ்தீன தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலை கண்டித்து தாம்பரம் வட்டார முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தாம்பரம் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் எம் கே நாகூர் கனி தலைமையில் நடைபெற்றது. தாம்பரம் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக வந்த 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சண்முகம் சாலை பாரதி திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னியரசு மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் யாக்கூப் ஆகியோர் கண்டன உரையாற்றினர் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் மாணவ மாணவிகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.