காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்தினை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தேசிய நல்வாழ்வு குழம இயக்குநர் ஷில்பா பிரபாகர்சதீஷ், மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் சரவண கண்ணன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு. பிரியா ராஜ் ஆகியோர் உள்ளனர்.