குரோம்பேட்டை நல்லப்பா தெருவில் உள்ள மழை நீர் கால்வாய் மலஜலம் செல்லும் கால்வாயாக மாறியதால் அந்த பகுதியே துர்நாற்றம் அடிக்கிறது. நோய்கள் பரவுவதற்கு ஏதுவாக அமைந்து உள்ளது. தாம்பரம் மாநகராட்சி 35 வது வார்டில் உள்ளது நல்லப்பா தெரு குரோம்பேட்டையின் முக்கிய பகுதியான இங்கு ஏராளமான வீடுகளும் பூங்காக்கள் மற்றும் கடைகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள ராஜேந்திர பிரசாத் சாலையில் இந்தியன் வங்கி சாலையில் பாதாள சாக்கடை மூடி உள்ளது. கனரக வாகனங்கள் செல்வதால் அந்த பகுதியில் கனரக வாகனங்கள் செல்வதால் அந்த மூடி அடிக்கடி உடைந்து விடுகிறது. மேலும் பாதாள சாக்கடையும் ஒழுங்காக தூர்வாரப்படுவதில்லை.
இரண்டு நாளைக்கு ஒருமுறை மாநகராட்சியினர் வந்து பாதாள சாக்கடை மூடி உடைவதை மாற்றி வருகிறார்கள். ஆனால் தரமான மூடி போடாததால் இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது. இது போல நல்லப்பா தெருவில் தெற்கு பக்கத்தில் ஒரு மழை நீர் கால்வாய் ஓடுகிறது. இந்த கால்வாய் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தப் பகுதியில் மலஜலம் கால்வாய் போல கழிவு நீர் கலந்த கால்வாயாக மாறிவிட்டது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவும் இந்த சூழ்நிலையில் இது போன்ற ஒரு மழை நீர் கால்வாய் கழிவு நீர் கால்வாயாக மாறி இருப்பதை அந்த பகுதி மக்கள் வேதனையுடன் கூறினார்கள். இந்தப் பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஸ்ரீதர் கூறும் போது மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக வந்து அந்த மழை நீர் கால்வாயை தூர்வாரி கழிவுநீர் கலப்பதை தடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவுன்சிலரிடம் புகார் கூறியும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. மாநகராட்சியினர் இதுபோன்று மெத்தனப் போக்குடன் செயல்பட்டால் டெங்கு போன்ற நோய் பரவுவதற்கு காரணம் ஆகிவிடும் என்றும் கூறினார்.