தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திருத்தணி & குறிஞ்சி செங்கல் சூளை குழு, திருவள்ளூர் எம்ராய்டரி தொழில் குழுவினர் சந்தித்து அரசு மானியம் வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்தியமைக்காக நன்றி தெரிவித்து, கோரிக்கை மனு அளித்தனர். இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.