மும்பையில்‌, உலகளாவிய கடல்சார்‌ இந்திய உச்சிமாநாடு- 2023. அக்டோபார்‌ 17 முதல்‌ 19 வரை நடைபெற்றுக்‌ கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கான தனி அமர்வில்‌, தமிழ்நாடு பொதுப்பணிகள்‌, நெடுஞ்சாலைகள்‌ மற்றும்‌ சிறு துறைமுகங்கள்‌ துறை அமைச்சர்‌ எ.வ.வேலு‌ கலந்து கொண்டு மாலை உரையாற்றினார்‌. இந்த அமர்வில்‌, சென்னை துறைமுக ஆணையம்‌ மற்றும்‌ காமராஜர்‌ துறைமுகத்‌ தலைவர்‌ சுனில்‌ பாலிவால்‌, நெடுஞ்சாலைகள்‌ மற்றும்‌ சிறு துறைமுகங்கள்‌ துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ பிரதீப்‌ யாதவ்‌. தமிழ்நாடு மின்‌ பகிர்மானக்‌ கழகத்தின்‌ மேலாண்மை இயக்குநர்‌ மற்றும்‌ தலைவர்‌ ராஜேஷ்‌ லக்கானி, தமிழ்நாடு தொழில்‌ வளர்ச்சிக்‌ கழகத்தின்‌ இயக்குநர்‌ சந்தீப்‌ நந்தூரி, மற்றும்‌ ஒன்றிய, மாநில அலுவலர்கள்‌ பங்கு பெற்றனர்‌.