சென்னை மேடவாக்கம் அடுத்த கோவிலாஞ்சேரியில் தனியார் வீட்டுமனை பிரிவுக்கு செல்லும் வழியில் உள்ள சிறு மேம்பாலம் அருகே நீரில் மிதந்தவாறு திருநங்கை சடலம் கிடந்தது. மேலும் அங்கு டியோ இருசக்கர வாகனமும் இருந்த நிலையில் தகவல் அறிந்த சேலையூர் போலீசார் பிரேதத்தை மீட்ட நிலையில் தலை, கழுத்து, பின் கழுத்து முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டுகாயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

அதே வேளையில் அங்கு திரண்ட நபர்களிடம் போலீசார் கொலையான திருநங்கை குறித்து விசாரித்தபோது அங்கு வந்த சஞ்சனா(28) எனும் திருநங்கை இறந்த நபர் என் சித்தப்பா தீனதயாளன்(50) சேலையூரை அடுத்த மப்பேடு எனும் பகுதியில் ஒன்றாக வசித்து வருவதாகவும் கடந்த 10 ஆண்டுகளாக திருநங்கையாக மாறி தெருக்கூத்து கட்டும் தொழிலில் தன்னுடன் ஒன்றாக பணி செய்வதாக கூறினார்.

மேலும் நேற்று இரவு தெருக்கூத்துக்கு அழைத்தபோது தற்போது உள்ள கோவிலாஞ்சேரில் வேலையாக இருப்பதாக செல்போனில் கூறியதாகவும், ஆனால் இன்று பிற்பகல் வீட்டிற்கு வராததால் அவரின் அண்ணன் முத்துபாண்டி வீட்டிற்கு வரவில்லை என கூறியதால் நேற்று குறிப்பிட்ட இடத்தில் தேடிவந்ததாக திருநங்கை சஞ்சனா போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனால் பிரேதத்தை உடற்கூறு ஆய்வுகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் வழக்கு பதிவு செய்து அருகிள் உள்ள டாஸ்மாக் கடைகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடிவருகிறார்கள்.

தெருக்கூத்து கட்டும் திருநங்கை கொலை செய்யப்பட்டு நீர் நிலையில் வீசி சென்ற சம்பவத்தில் அவருக்கு நான்கு தெரிந்த நபர்களாக இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை செய்து வருகிறார்கள்.