சென்னை தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரம் வேங்கைவாசல் பிரதான சாலையில் கடந்த 7 மாதமாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.

சந்தோஷ்புரம் ,வேங்கைவாசல் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்து மாற்று வழியில் செல்கின்றனர்.

இதனால் ஏற்கனவே வேலைக்கு செல்பபவர்கள், பள்ளி மாணவர்கள் நெடுந்தூரம் நடந்து சென்று பேருந்தை பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வேங்கைவாசாலில் இருந்து சந்தோஷ்புரம் செல்வதற்காக சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த டாரஸ் லாரி திருப்பத்தில் சிக்கியதால் லாரி ஓட்டுனர் கவனகுறைவாக பின்னால் வேகமாக லாரியை இயக்கியதால் பின்புரம் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த எலக்ட்ரீசியின் மோகனசுந்தரம் (41) என்பவர் மீது பின் சக்கரம் ஏறி இறங்கியதில் கால் மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் மாலை உயிரிழந்ததார் இச்சம்பவம் குறித்து பள்ளிகரனை போக்குவரத்து புலனாய்வு துறை அதிகாரிகள் லாரி ஓட்டுனர் குப்பன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடந்து இன்று காலை சந்தோஷ்புரம்,வேங்கைவாசல் சாலை வழியாக சென்ற கார் ஒன்று அங்கு மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் உள்ள சேற்றில் சிக்கியதால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக பணிகளை முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.