தாம்பரம் சானடோரியத்தில், மாநில தீயணைப்பு துறை பயிற்சி மையம் இயங்கி வருகிறது.
இங்கு, தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் வீரர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த நிலையில், 2023, ஜூலை மாதம், 137 வது அணிக்கான புதிய தீயணைப்போர் அடிப்படை பயிற்சி துவங்கியது.
இது, மூன்று மாதங்கள் கொண்ட பயிற்சியாகும். 127 தீயணைப்பு துரை வீரர்களுக்கு, தீயணைப்பு துறை சார்ந்த அடிப்படை, தடை தாண்டுதல், ஆழ்கடல் நீச்சல், கயிறு மூலம் மீட்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
பயிற்சி முடித்த வீரர்களுக்கான அணிவகுப்பு நிகழ்ச்சி, சானடோரியத்தில் உள்ள மாநில பயிற்சி மையத்தில் நடந்தது.
இதில், தீயணைப்பு துறை இயக்குனர் ஆபாஷ்குமார் கலந்துகொண்டு, பயிற்சி வீரர்களின் அணிவகுப்பை மரியாததை ஏற்றுகொண்டார்.
தொடர்ந்து, பயிற்சி முடித்தவர்களுக்கு, சென்னையில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டு, அதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. தீயணைப்பு துறை கூடுதல் இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், மாநில பயிற்சி மைய இணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்பு பேட்டியளித்த தீயணைப்பு துறை இயக்குனர் ஆபாஷ்குமார்,
மாநில பயிற்சி மையத்தில், பெரிய கட்டிடம் ஒன்று கட்டப்பட உள்ளது. இது முடிக்கப்பட்டால், இன்னும் பல வீரரர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். மேலும், பெரிய கட்டங்களில், தீ விபத்து ஏற்பட்டால், அதை சமாளிக்க வசதியாக, ‘ட்ரோன்’, ‘ரேபோட்’ வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. புதியதாக கமாண்டன்ட் கண்ட்ரோல் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது’, என்றார்.