சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவல் துறையினர் சார்பில் மாநில அளவிலான ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு போக்குவரத்து காவல் காப்பாளர் சார்பில் பல்லாவரம் தெரேசா பள்ளியில் நடைபெற்ற ஓவிய போட்டியில் 25 பள்ளிகளை சேர்ந்த 134 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.
இதில் தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையாளர் குமார் மாணவர்களின் ஓவிய போட்டியை துவக்கிவைத்தார். தமிழ்நாடு போக்குவரத்து காவல் முதன்மை காப்பாளர் கருப்பையா, போக்குவரத்து உதவி புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் அறிவழகன், ஆய்வாளர் சீனிவாசன், போக்குவரத்து காவல் காப்பாளர் பதமநாபன் உள்ளிட்ட போக்குவரத்து காப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய இடங்களை பிடிக்கும் மாணவர்கள் இறுதி சுற்றில் பங்கேற்று தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் சங்கர்ஜிவால் முன்னிலையில் பரிசும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.