
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானடோரியம், ஜட்ஜ் காலனி பகுதியில் ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் 464 படுக்கைகள் கொண்ட நவீன வசதியுடன் புதியதாக கட்டப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள அரசு பணிபுரியும் பெண்களுக்கான விடுதியினை தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா மற்றும் அதிகாரிகள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு அமைக்கப்படும் தங்கும் அறைகள், நவீன சமையலறை, யோகா உள்ளிட்ட பல பயன்பாடு அரங்கு, இணையதளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியான கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சியாக கணிணி மற்றும் தையல் பயிற்சிகள் அளிக்கப்படும் நிலையில் அதற்கான வகுப்புகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த மாணவிகளிடம் அவர்களுக்கு தேவையான வசதிகள் பயிற்சி மையத்தில் உள்ள குறைகள் குறித்து கேட்டறிந்தார்.