தேவையானவை: சேமியா – 2 கப் ரவை – 1/2 கப் உளுத்தம் பருப்பு – 1/2 கப் மஞ்சள் தூள் – சிட்டிகை உப்பு – தேவையான அளவு தாளிக்க: நெய் – தேவையான அளவு மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் முந்திரி – 10 இஞ்சி -சிறிதளவு. கறிவேப்பிலை -தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் பருப்பைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். சேமியா மற்றும் ரவையை தனித்தனியாக அதே கடாயில் சூடாக வறுக்கவும். பாசிப்பருப்பை நன்றாகக் கழுவி, கொதிக்கும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். வாணலில் நெய்யை போட்டு தாளித்து, ஒரு பங்கு சேமியா & ரவைக்கு இரண்டு (அ) இரண்டே கால் தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும். பருப்பு ஏற்கனவே வெந்துவிட்டதால் தண்ணீர் சேர்க்க வேண்டாம். தண்ணீர் கொதித்ததும் தேவையான உப்பு மற்றும் வேகவைத்த பருப்பை போட்டு மூடி வைக்கவும். மீண்டும் ஒரு கொதி வந்ததும் சேமியாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி கொதிக்கும் வரை மூடி வைக்கவும். சேமியா வெந்ததும் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கட்டியில்லாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். ரவையை சேர்த்து நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைக்கவும். இந்த சூட்டில் ரவை வேகும். சுவையான ரவை சேமியா பொங்கல் தயார். இதற்கு சாம்பார் ஒரு சிறந்த சைட்டிஷ் ஆக இருக்கும்.