சென்னை அடுத்த கோவளம் அருகே ஆந்திர பதிவெண் கொண்ட கார் கட்டுபாட்டை இழந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில் கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் பணியாற்றும் சந்திரசேகர், அவர் மனைவி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த அவர்களின் குழந்தை கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் உயிரிழப்பு.

சந்திரசேகர் இருசக்கர வாகனத்தில் கேளம்பாக்கம் சென்றுவிட்டு கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகே செம்மஞ்சேரி எனும் பகுதியில் சென்றபோது ஆந்திரபதிவெண் கொண்ட கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் அந்திராவை சேர்ந்த வினாய் பாபு என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்..