அதிக வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு நாள் முழுவதும் ஓய்வில்லாமல் உழைப்பதனால் நமது உடல் களைப்படைகிறது. உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களில் ஏற்படும் கருவளையம் நமக்கு உணர்த்துகின்றது. தூக்கம் ஒன்றே நமது உடலுக்கும் கண்களுக்கும் சரியான ஓய்வாகும்.
இரவு நேரங்களில் அதிகம் கணினி மற்றும் கைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் நேரடியாக கண்களை தாக்குகின்றது. சரியான நேரத்தில் உறங்காமல் கணினி மற்றும் கைபேசியில் நேரத்தை கழிப்பதால் தான் பெரும்பாலும் கருவளையம் ஏற்படுகின்றது.
தினமும் 8 மணிநேரம் உறங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியான ஆரோக்கியமான தூக்கத்தை பின்பற்றும் போதே இலகுவாக கண் கருவளையத்தில் இருந்து விடுபடலாம்.
புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை இன்றே கைவிடுவது சிறந்தது. இது கண் கருவளையத்திற்கு மட்டும் காரணமாக அமையாமல் பல்வேறு உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது. சிலருக்கு ஊட்டச்சத்து குறைபாட்டாலும் கண் கருவளையம் ஏற்படுகின்றது. உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை உண்பது மிகவும் அவசியம்.
அதிக வெயில் காரணமாகவும் கண் கருவளையம் ஏற்படுகின்றது. வெயில் காலங்களில் வாரம் ஒரு முறை கண்களை குளிர்ச்சிப்படுத்தும் வெள்ளரியை துண்டாக வெட்டி கண்களின் மேல் வைப்பது சிறந்தது.