9ம் வகுப்பு படித்து வரும் ஜெயலட்சுமியின் மூத்த மகள் பள்ளி மாதாந்திர தேர்வில் இரண்டு பாடத்தில் தோல்வியடைந்தது காரணமாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில் மனைவி எடுத்த விபரீத முடிவால் பெரும் பரபரப்பு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 31). இவரது கணவர் நாகராஜ். இவர்களுக்கு 14 வயது மற்றும் 11 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த 5 வருடங்களாகவே கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து தனித் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதேபோல், சேலம் தாதகாபட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழழகன் (31) 14 வருடங்களுக்கு முன்பு மேட்டூரைச் சேர்ந்த வினோதினி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக வினோதினி மற்றும் குழந்தைகளை விட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த ஜெயலட்சுமியுடன் மனைவியை பிரிந்து வாழ்ந்த தமிழழகனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அம்மாபேட்டை பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். இந்த நிலையில், 9ம் வகுப்பு படித்து வரும் ஜெயலட்சுமியின் மூத்த மகள் பள்ளி மாதாந்திர தேர்வில் இரண்டு பாடத்தில் தோல்வியடைந்தது காரணமாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இருவரும் வீட்டில் தங்களது கைகளில் கிடைத்த பொருட்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாங்கிக்கொண்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஒரு கட்டத்தில் கோவத்தின் உச்சத்துக்கே சென்ற ஜெயலட்சுமி ஆத்திரத்தில் வீட்டில் உடைந்து கிடந்த பீர் பாட்டிலை எடுத்து தன்னைத் தானே கழுத்தில் குத்திக் கிழித்துள்ளார். இதில் ஜெயலட்சுமியின் கழுத்தில் இருந்து ரத்தம் வீடு முழுவதும் சிதறி ரத்த வெள்ளத்தில் அவரது உயிர் பிரிந்துள்ளது.