தி மு க அமைச்சரும், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவுக்கு சொந்தமான ருபாய். 5.85 கோடி மதிப்புள்ள 47 ஏக்கர் இடம் முடக்கப்பட்டுள்ளது. கோவை ஷெல்டர்ஸ் பிரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பினாமி நிறுவனத்தின் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.