தற்போது திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16127) வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையும், 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும், 29 மற்றும் 30-ந் தேதிகளில் சென்னையில் இருந்து எர்ணாகுளம் வரை மட்டும் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.