சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா மற்றும் தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்:
1) வன்னியப்பெருமாள்: ஹோம் கார்டு
2) தமிழ்சந்திரன்: தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணயம்.
3)செந்தில்குமாரி: கூடுதல் ஆணையர் (மத்திய குற்றப்பிரிவு சென்னை)
4) மகேஷ்வரி : நெல்லை சரக டி.ஐ.ஜி.
5) ஜோஷிநிர்மல் குமார்: சிவில் சப்ளை சி.ஐ.டி.,
6) திஷா மிட்டல்: தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.
7) அபிஷேக் தீட்ஷித்: சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர் (வட சென்னை )
8) சாமுண்டீஸ்வரி: சென்னை காவல் தலைமை அலுவலக டிஐஜி.
9) சுரேஷ்குமார்: தென்காசி மாவட்ட எஸ்.பி.,
10) சாம்சன் : கண்காணிப்பாளர் போதை பொருள் தடுப்பு பிரிவு – சென்னை
11)ஜெயக்குமார்: கண்காணிப்பாளர் திருவாரூர் மாவட்டம்
12) பிரபாகரன் : கண்காணிப்பாளர் கரூர் மாவட்டம்.
13) சுந்தரவதனம்: கன்னியாகுமரிமாவட்ட கண்காணிப்பாளர்.
14) ஹரிஹிரன் பிரசாத்: கண்காணிப்பாளர். ராமநாதபுரம் மாவட்ட கடேலோர் பாதுகாப்புபடை.
15) சுந்தரவடிவேல்: நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர்.
16) தீபா சத்யன்: காவல் நிர்வாகத்துறை கூடுதல் ஐ.ஜி., சென்னை.
9 ஐ.ஏ.எஸ்.கள் இடமாற்றம்
இதே போன்று 9 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக தமிழக தலைமை செயலாமர் ஷிவ்தாஸ் மீனா பிறப்பித்த உத்தரவு விவரம்:
1) லஷ்மிபதி: தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமனம்
2) தங்கவேல்: கரூர் மாவட்ட கலெக்டராக மாற்றம்
3) பிரபு சங்கர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக நியமனம்
4) சுந்தரவள்ளி: தமிழ்நாடு வேலைவாயப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையராக மாற்றம்.
5) வீரராகவ ராவ்: தொழில்நுட்பக கல்வித்துறை ஆணையராக மாற்றம்
6) செந்தில்ராஜ்: மாநில தொழில்மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனராக மாற்றம்.
7) ஆல்பே ஜான் வர்கீஸ்: சென்னை பெருநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனராக மாற்றம்.
8) சுருதன்ஜெய் நாராயணன்: விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் திட்ட கூடுதல் கலெக்டராக நியமனம்
9) ரத்தினசாமி: ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் திட்ட கூடுதல் கலெக்டராக நியமனம்.