
தாம்பரம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில், மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா முன்னிலையில், சென்னை பெருநகர தென்பகுதிக்கான பாதாள சாக்கடை திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல்நாத், தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையாளர் எம்.செந்தில்முருகன், தலைமை பொறியாளர் கு.பாண்டுரங்கன், நகர் நல அலுவலர் டாக்டர். அருள்ஆனந்த், உதவி ஆணையாளர்கள், எஸ்.சகிலா மற்றும் மாரிச்செல்வி மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.