
தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியில் உள்ள பெரிய ஏரியிலிருந்து கரசங்கால் பகுதி வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும் உபரிநீர் கால்வாயில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ்க்கும்,மணிமங்கலம் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் நிகழ்வு இடத்திற்கு வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியோடு கால்வாயில் கிடந்த நபரை பரிசோதனை செய்தனர்.
இதில் தலை, மற்றும் உடலில் ரத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. பின்னர் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தியதில் இறந்த நபர் கரசங்கால் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (45) என்பதும், இவர் பெயிண்டர் வேலை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. தலை மற்றும் உடலில் ரத்த காயங்களுடன் உயிரிழந்த கிடைப்பதால் யாரேனும் முன்விரோதம் காரணமாக அடித்துக் கொலை செய்து சடலத்தை கால்வாயில் வீசி சென்றார்களா, அல்லது தானே உயிரை மாய்த்துக் கொண்டாரா என்ற கோணத்தில் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.