மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்குவதில் தற்போது புதிய பிரச்னை எழுந்துள்ளது.

ரூ.1,000 வேண்டி விண்ணப்பித்த புதுக்கோட்டையை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் மனைவி சித்ரா என்பவருக்கு அவர் அரசு வேலையில் இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

இது தொடர்பாக அவர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இணைய கோளாறு காரணமாக இவ்வாறு பலருக்கும் மெசேஜ் சென்றுள்ளது என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு தற்போது வரை 7 லட்சம் பேர் மறுவிண்ணப்பம் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.