அவரது அறிக்கை விவரம்: “கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அமைதியான கோயம்புத்தூர் மாநகரத்தில் அடிப்படைவாத இஸ்லாமிய தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டுகள் வெடித்ததில், 58 உயிர்களைப் பறிகொடுத்ததோடு மட்டுமல்லாமல், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
1998 ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு ஏற்படுத்திய காயத்தின் வலி இன்னும் ஆறாத நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபரில், நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல் சம்பவம் கோவையை உலுக்கியிருக்கிறது. இந்த பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட 13 தீவிரவாதிகளை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது.
கடந்த வாரம், மாண்புமிகு உச்சநீதிமன்றம், கோவை குண்டுவெடிப்பு ஒரு கொடூரமான செயல் என்று கூறி, இந்த வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் சிலர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
ஆனால், இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், கோவை குண்டுவெடிப்பு மற்றும் பிற கடும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பயங்கரவாதிகளை விடுதலை செய்வது குறித்து தமிழக சட்டசபையில் இன்று விவாதிக்கப்பட்டுள்ளது. வாக்களித்துத் தேர்ந்தெடுத்த பொதுமக்களின் பாதுகாப்பை விட, சிறுபான்மையினரை திருப்தி செய்வதுதான் ஒரு சிலருக்கு முக்கியமாகிவிட்டது போலும்.
கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளை, சிறையில் இருந்து விடுவிக்கும் இந்த தவறான முன்னெடுப்பை, தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் நிறுத்திக் கொள்வார் என்று நம்புகிறோம்.”