கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ‘புருசெல்லோசிஸ்’ என்ற புதிய நோய் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெம்பாயம் பகுதி அருகே உள்ள வேற்றிநாடு என்ற இடத்தில் இந்த தொற்றுக்கான அறிகுறி சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கால்நடைகளிடம் இருந்து இந்த தொற்று பரவி தந்தை மற்றும் மகனுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து, மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.