காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 10,000 கடைகளும், திருவாரூர் மாவட்டத்தில் 30000 கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளனர்.