சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு பேசியதாவது,
தமிழ்நாட்டை சேர்ந்த மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு அரசு சார்பாக மரியாதை செலுத்தப்பட்டதாகவும் இனி அவர் பசுமை புரட்சியின் தந்தை என்று போற்றப்படுவார் என அவர் தெரிவித்தார்.
மேலும் தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையம் மற்றும் கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து ஆண்டு தோறும் இளம் வேளாண்மை அறிவியல் மற்றும் மரபியல் பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.