ஹுரன் இந்தியா மற்றும் 360 ஒன வெல்த் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி ரூ.8.08 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். 2014ல் ரூ.1.65 லட்சம் கோடியாக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 9 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்துள்ளது. அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானியின் சொத்துமதிப்பு ரூ. 4.74 லட்சம் லட்சம் கோடியாக சரிந்துள்ளதால் பணக்காரர்கள் பட்டியலில் அவர் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பங்கு சந்தை முறைகேடு தொடர்பான ஹிண்டன்பெர்க் அறிக்கையில் அதானியின் சொத்து மதிப்பு பெரும் சரிவை கண்டுள்ளது.

பணக்காரர்கள் பட்டியலில் ரூ.2.78 லட்சம் கோடியுடன் சீரம் நிறுவன தலைவர் சைரஸ் பூனாவாலா 3ம் இடத்திலும் எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் ரூ.2.29 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 4ம் இடத்திலும் உள்ளனர். தொழிலதிபர் கோபிச்சந்த் இந்துஜா ரூ.1.76 லட்சம் கோடியுடன் 5ம் இடத்திலும் சன் பார்மா தலைவர் திலீப் சங்வி ரூ.1.64 லட்சம் கோடியுடன் 6ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.ரூ.1.62 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் தொழிலதிபர் லட்சுமி மிட்டல் பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளார்.ட்மார்க் சூப்பர் மார்க்கெட் நிறுவனர் ராதாகிஷன் தமனி ரூ. 1.44 லட்சம் கோடியுடன் 8ம் இடத்திலும் ஆதித்யா பிர்லா குழும தலைவர் குமார் மங்கலம் பிர்லா 9ம் இடத்திலும் தொழிலதிபர் நநீரஜ் பஜாஜ் பிடித்துள்ளார்.