கேரட்டில் வைட்டமின் ஏ, சி, கே, பி6, பொட்டாசியம், பாஸ்பரஸ், கரோட்டினாய்டுகள் உள்ளன. கேரட் ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் தடுக்கப்படுவதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். இது சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரும். கேரட் ஜூஸ் உடன் எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடை இரு மடங்கு குறையும்.