மூளையை பலப்படுத்தும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. உடல்நலத்தை அதிகரித்துக் கொள்வோம்.
முந்திரி, வால்நட், பாதாம் போன்றவற்றில் விட்டமின் கி, மக்னீசியம், செலினியம், போலட், போலிக் அமிலம், மெலட்டோனின், கோலின், ஒமேகா3 போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த ஊட்டச்சத்துக்கள் மூளையினது வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலங்களது பாதுகாப்புக்கும் பெரிதும் உதவுகின்றன. இவற்றை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுதல் நன்று. இவை மன அழுத்தத்தைக் குறைக்க கூடியவை.
மஞ்சளில் காணப்படும் குர்குமின் எனப்படும் பதார்த்தம் மறதியை குணப்படுத்த கூடியது. தினமும் சிறிய அளவு உணவில் சேர்த்து கொள்ளுதல் நன்று.
மனதில் சீர்ப்படுத்தும் தன்மையை கூட்டுவதோடு மூளையின் வளர்ச்சி ஹோர்மோனினது செயற்பாட்டை அதிகரிக்கும். அளவுக்கு மீறி உண்டால் பித்தப்பை பிரச்சனைகள் உருவாகும்.
முட்டையில் புரதம் போன்றவை அதிகளவில் காணப்படுவதால் மூளையின் அறிவாற்றல் அதிகரிக்கும். மேலும் ஞாபக மறதி போன்ற நோய்களை குணப்படுத்த வல்லது.
எண்ணெய் சத்து நிறைந்த மீன்களில் ஒமேகா 3, கொழுப்பு, தோரின் அமிலம் போன்றன அதிகளவில் காணப்படுகின்றன. இதனால் இவற்றை அதிகளவில் உண்பதால் நினைவாற்றல் அதிகரிப்பது அதுமட்டுமல்லாமல் அல்சைமர், டிமென்ஷியா போன்ற நோய்கள் வருவதை தடுக்கும் தொடர்ச்சியாக உண்டு வர உடல் எடை அதிகரிக்கும்.