முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசிய கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு, நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்கூட்டம் நடத்தி, பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தார். முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய குமரகுரு, பொதுக்கூட்டம் நடத்தி மன்னிப்பு கோர நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.