மீன் எண்ணெயில் `ஒமேகா 3′ கொழுப்பு அமிலம் அதிகம் இருக்கும். இந்த வகை கொழுப்பு அமிலம் உடலுக்கு நன்மை அளிப்பது என்பதால் இதய பிரச்சனை வராது. ரத்தத்தில் உள்ள டிரைகிளிசரைடு எனும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பு அளவு அதிகரிப்பதை தடுத்து ரத்தஅழுத்த பிரச்சனையை சரிசெய்ய உதவும். வயது முதிர்வால் ஏற்படும் மூட்டு வலி, எலும்பு தேய்மான பிரச்சனையை சரியாக்கும்.