ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலைக்கு செல்லும் முன், பக்தர்கள் பாத விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு,
அதன் பின்பு தான் படிப்பாதைகளிலோ, யானை பாதைகளிலோ, மின்னிலுவை ரயிலிலோ, ரோப் காரிலோ, செல்வார்கள்.
இதில், நடந்து செல்லும் பக்தர்களுக்கு வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் கால்களில் சூடு தாங்காமல், கொப்பளங்கள் ஏற்பட்டு உள்ளது.
இதனால் பக்தர்கள் அவதி அடைகின்றனர்.
பக்தர்களின் நலன் கருதி நிழல் பந்தலோ அல்லது தரை விரிப்போ அல்லது கூலிங் ஒயிட் பெயிண்ட் அடிக்க வேண்டும் என பக்தர்கள் விரும்புகின்றனர்.