நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாஜக அரசை காங்கிரஸ் MP ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு பின்பு பேசிய அவர், பாஜக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது ஆட்சியை விட்டு போக வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு என்றும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பிறகே மக்களின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

காங்கிரஸ் ஆளும் 4 மாநிலங்களில் 3 முதலமைச்சர்கள் OBC பிரிவை சேர்ந்தவர்கள்

ஆனால், பாஜக ஆளும் 10 மாநிலங்களில் ஒரு முதலமைச்சர் மட்டுமே OBC பிரிவை சேர்ந்தவர்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் ஆற்றலும், துணிச்சலும் மோடிக்கு இல்லை