சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விமையத்தின் மூலம், வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைன் மூலம் பி.காம், எம்.காம், பிபிஏ ஆகிய மூன்றாண்டு இளநிலைக் கல்வியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தவும், தேர்வுகளை நடத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாகவும், விடியோ மூலம் வகுப்புகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அவுட்சோர்சிங் முறையில் செய்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.