
போக்குவரத்து மாற்றம் – விபரம்!
ஸ்மித் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுகிறது. அண்ணா சாலை, ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை செல்லலாம். ஆனால் ஓயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து அண்ணா சாலை செல்ல அனுமதி இல்லை.
பட்டுல்லாஸ் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுகிறது. ஒயிட்ஸ் சாலை – பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணாசாலை செல்லலாம். ஆனால் அண்ணா சாலை – பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்ல அனுமதி இல்லை.
ஜி.பி. சாலை – பின்னி சாலை சந்திப்பில் இருந்து அண்ணா சாலை சென்று ஒயிட்ஸ் சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் நேராக ஸ்மித் சாலை சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி ஸ்மித் சாலை, ஒயிட்ஸ் சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
ராயப்பேட்டை மணிகூண்டு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை சென்று அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி, பட்டுல்லாஸ் சாலை, அண்ணா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். ஸ்மித் சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
திரு.வி.க. சாலை – ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஓயிட்ஸ் சாலையில் வந்து அண்ணா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் நேராக பட்டுல்லாஸ் சாலை சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி பட்டுல்லாஸ் சாலை, அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
அண்ணாசாலை – பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து பின்னி சாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி அண்ணாசாலையில் ஸ்பென்சா், எதிா்புறம் உள்ளே யு வளைவில் திரும்பி பின்னி சாலை, பிராட்வே நோக்கி செல்லலாம்.