சிறு வணிகர்கள் நலன் காத்திடும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது.

ரூ.50,000-க்கு கீழ் வரி வட்டி, அபராதம் செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு விலக்கு.

வரி விலக்கின் மூலம் 95,000 வணிகர்கள் பயன்பெறுவர்.

வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வணிகவரித்துறையில் பணிச்சுமை அதிகரிக்கிறது.

இதனால் வணிகர்களும் சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறார்கள்.

அரசுக்கு வரவேண்டிய வருவாயும் வராமல் உள்ளது, நிலுவையில் உள்ள வரியை வழங்குவதற்கு அரசு சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்கள் முன் வைத்தனர்.

அதற்காக புதிய வடிவத்தில் சமாதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது – சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு